காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே மோதல்!

ஸ்ரீநகர் (01 நவ 2020): ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் ஹிஜ்புல் முஜாஹிதின் பயங்கரவாத தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீநகரில் உள்ள ரங்கிரெட்டி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இந்த மோதல் நடந்துள்ளது.

போலீசாரின் தேடலின் போது ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டன.சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறை கூட்டாக இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் ஐஜி விஜய் குமார், இந்த என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி ஷைப்புல்லா மீர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்: