அழைத்த கவர்னர் – மறுத்த முதல்வர்!

புதுடெல்லி (27 ஜன 2023): தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.

டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு எடுத்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 16-ந் தேதி, கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும், அமைச்சர்களும் பேரணி சென்றனர். ஆனால், கவர்னர் சந்திக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

கவர்னர், தனக்கு தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்வதாக சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அதை கவர்னர் மறுத்தார். கவர்னரை வெள்ளிக்கிழமைதோறும் முதல்வர் சந்திப்பது வழக்கம். ஆனால், இந்த மோதலால் இச்சந்திப்பு சில வாரங்களாக நடக்கவில்லை.

இந்த பின்னணியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று திடீரென அழைப்பு விடுத்தார். அமைச்சர்கள், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த அழைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கவில்லை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கவர்னரின் அழைப்புக்கு நன்றி. வெள்ளிக்கிழமை பஞ்சாப் செல்கிறேன். அங்கு 400 மக்கள் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறேன். ஆகவே, வேறு தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கவர்னரை கேட்டுக்கொண்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...