காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இணைய வேண்டும் – கம்யூனிஸ்ட் தலைவர் அதிரடி!

தோஹா (10 மார்ச் 2023): எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே, அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், தேசிய மகளிர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆனி ராஜா கூறினார்.

யுவ கலாசாஹிதி 17வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அனி ராஜா தோஹா வந்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸை ஒதுக்கி வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்கொள்ள முடியாது. பிராந்தியக் கட்சிகளும், தேசிய அளவில் பலம் வாய்ந்த காங்கிரஸும் ஒன்றுபட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள முடியும்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் குவிந்துள்ள பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்க பரிவாரை எதிர்க்க வேண்டும். உள்ளூர் கட்சிகளுக்கு அவர்களின் சொந்த நலன்கள் உள்ளன. எனினும் தேச நலன் கருதி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஆனி ராஜா கூறினார்.

ஆட்சியாளர்களை விமர்சிக்காமல் இருப்பது தவறான நடைமுறை என்றும், அரசுக்கு எதிரான விமர்சனம் என்பது ஆட்சியாளர்களை மோசமாக சித்தரிப்பதற்காக அல்ல என்றும் அவர்களை சீர்படுத்தவே அது உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினர்.

இடதுசாரி செயற்பாட்டாளரான தாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையில் அரசை விமர்சிப்பதாகவும், அவர் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சி கால்த்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...