உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தும் காங்கிரஸ்!

Share this News:

உன்னாவ் (13 ஜன 2022): உ.பி., சட்டசபை தேர்தலில், உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை, காங்கிரஸ் வேட்பாளராக நியமித்துள்ளது.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உன்னாவ் மகளுக்கு பாஜக அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். “இப்போது, [வன்புணர்வு செய்யப்பட்டவரின் தாயார்] நீதியின் முகமாக இருப்பார்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் 2017 ஆம் ஆண்டு உன்னாவ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். அவர் 2019 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு வெளியே பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப் பட்ட பெண் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, உன்னாவ் கற்பழிப்பு வழக்கு தேசிய அளவில் பேசுபொருளானது.

குல்தீப் செங்கார் மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தை ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காவலில் வைக்கப்பட்ட அவர் சித்திரவதை காரணமாக அவர் போலீஸ் காவலில் இறந்தார். 2020 ஆம் ஆண்டில், உன்னாவ் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் மரணம் தொடர்பாக குல்தீப் சிங் செங்காருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாலியல் குற்றம் தொடர்பாக அவருக்கு ஆயுள்தண்டனையும் கிடைத்தது குறிப்பிட்டத்தக்கது.


Share this News:

Leave a Reply