உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு – போராட்டத்தை தொடர முடிவு!

புதுடெல்லி (13 ஜன 2021): விவசாயிகளின் சட்டங்களை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த குழுவுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் முன்வந்துள்ளன. அவர்கள் குழுவுடன் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று அமைப்புகளின் கருத்து. சட்டத்தை ஆதரிப்பவர்கள் குழுவில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகவும் விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் உள்ள உழவர் அமைப்புகள் தாங்கள் ஒரு குழு முன் ஆஜராக மாட்டோம் என்றும் வேலைநிறுத்தத்தை தீவிரமாக தொடருவதாகவும் கூறியுள்ளனர்.

வேளாண் சட்டத்தின் நகலை எரிப்பதன் மூலம் விவசாயிகள் இன்று எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறாது. இதற்கிடையே 18 ஆம் தேதி பெண்கள் நாடு தழுவிய போராட்டம் மற்றும் குடியரசு தினத்தில் டிராக்டர் அணிவகுப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், டிராக்டர் அணிவகுப்பை அனுமதிக்க வேண்டாம் என்று டெல்லி காவல்துறை தாக்கல் செய்த மனு மீது உழவர் அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிரந்தர தீர்வே சரியானது என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் போராட்டத்திற்கு முடிவுரை எழுத நினைத்த அரசின் எண்ணம் கைகூடவில்லை.

ஹாட் நியூஸ்:

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...