இந்தியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து சுகாதார ஊழியர்கள் கவலை!

Share this News:

பெங்களூரு (20 ஜன 2021): இந்தியாவில் வழங்கப்படும் சோதனையின் கட்டம் முடிவடையாத கோவேக்சின் தடுப்பூசி குறித்து கர்நாடக அரசு மருத்துவர்கள் சங்கம் (கேஜிஎம்ஏ) கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து கே ஜி எம் ஏ, சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், “தற்போது விநியோகிக்கப்படும் இரண்டு வகை தடுப்பூசிகளில் எது பாதுகாப்பானது என்பது குறித்து சுகாதார ஊழியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.” தெரிவித்துள்ளனர்.

மேலும், சோதனையின் கட்டத்தில் உள்ள தடுப்பூசி விநியோகம் சுகாதார ஊழியர்களிடையே சந்தேகத்தை எழுப்புவதாகவும், தற்போதைய தடுப்பூசி விநியோக முறை குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும் அமைப்பின் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், சுகாதார அமைச்சர் கே.சுதாகர், தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்றும், மாநிலத்தில் தடுப்பூசி செயல்முறை வெற்றிகரமாக முன்னேறி வருவதால் தவறான அறிக்கைகளை நம்பக்கூடாது என்றும் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply