பொருளாதாரம் கோமாவில் உள்ளது – முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சாடல்!

Share this News:

புதுடெல்லி (24 ஜூலை 2020): நமது பொருளாதாரம் கோமா நிலையில் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்

சிங்கப்பூரை சார்ந்த டிபிஎஸ் வங்கி நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொண்டு ரகுராம் ராஜன் உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்கள் :

ஆர்பிஐ நாட்டின் வங்கிகளிடமிருந்து ரிவர்ஸ் ரிபோ விகிதத்தில் தொகையினை வாங்கி மத்திய அரசுக்கு கடனாக வழங்கி வருகிறது. இதனால் வங்கிகளுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும்.

நிதிப்பற்றாக்குறையை அதிகப் பணப் புழக்கம் கொண்டு சமாளிக்கலாம் என சிலர் தீர்வாக சொல்கின்றனர். ஆனால் குறைந்த காலத்திற்கு மட்டுமே இதனை கடைப்பிடிக்க முடியும். இது நிரந்தர தீர்வல்ல.

வங்கிகள் தற்போது கடன் வழங்குவதை குறைத்துள்ளதால் மத்திய வங்கிகள் பணப்பெருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டால் அரசுக்கும் ஆர்பிஐக்கும் கூட்டுறவு ஏற்படும். ஆனால் இதுவும் எத்தனை நாட்களுக்கு செய்ய வேண்டும் என்பதற்கு வரையறை உள்ளது.

நமது பொருளாதாரம் கோமா நிலையில் உள்ளது. விழித்தெழுந்து அனைவரும் வாழ்க்கையை வாழத் தயாராகி விடுவார்கள் என கருதிட முடியாது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நாம் போகும் விதத்தினை மாற்றும் என நம்புகிறேன்”

இவ்வாறு ரகுராம் ராஜன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்


Share this News:

Leave a Reply