இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் திடீர் சோதனை!

மும்பை (14 பிப் 2023): மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படம் வெளியானதை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை மையமாக வைத்து உலக அளவில் பிபிசி நிறுவனம் செய்திகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது.

இதனிடையே 2002 குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தலைவிரித்தாடிய வன்முறை தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ஆவணப்படம் ஒன்றை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக இது மாறிய நிலையில் ஆவணப் படத்தை ஒன்றிய அரசு தடை செய்தது. என்றாலும் அதனை மொழியாக்கம் செய்து வெளியிட்டு வரும் எதிர்க்கட்சிகள் , பிரதமர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தின.

இந்த நிலையில் டெல்லி கே.ஜி.மார்க் மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அலுவலகத்தில் உள்ள வரவு – செலவு ஆவணங்களை கைப்பற்றி சரிபார்க்கும் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆய்வு நடைபெற்று வருவதால் அலுவலகத்திற்கு ஊழியர்கள் யாரும் வர வேண்டாம் என நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரம் வரை பணிக்கு வர வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஹாட் நியூஸ்:

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள்,...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...