கங்கனா ரனாவத்தின் பதிவுகள் மீது ட்விட்டர் அதிரடி நடவடிக்கை!

Share this News:

புதுடெல்லி (05 பிப் 2021): நடிகை கங்கனா ரனாவத்தின் விவசாயிகளுக்கு எதிரான பதிவுகளை நீக்கம் செய்து ட்விட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பலர் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டரில், ’நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது இந்தியா வலுவாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நேரம் இது. நாட்டின் முன்னேற்றத்தில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைவரும் ஒன்றாக ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் தங்கள் பங்கை வகிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்று கருத்து பதிவிட்டு இருந்தார்.

ரோகித் சர்மாவின் இந்த கருத்துக்கு இந்தி நடிகை கங்கனா ரனாவத் கோபமாக பதில் அளித்திருந்தார். அதில், ’இந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஏன் டோனியின் அருகே நாய்களைப் போல குரைக்கிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட புரட்சி கர சட்டங்களை விவசாயிகளே ஏன் எதிர்க்கிறார்கள்?’ என்று பதிவிட்டிருந்தார். மேலும், மோதல்களுக்கு காரணமானவர்களை தீவிரவாதிகள் என்று மீண்டும் விமர்சித்தார்.

கங்கனா பதிவிட்ட இந்த கருத்து சர்ச்சையானதால் சில நிமிடங்களில் டுவிட்டர் அதனை நீக்கியது. அவரது கருத்து, வெறுப்பு பிரசாரம் என கூறி அதனை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. “டுவிட்டர் விதிகளை மீறும் வகையிலான டுவிட்களின் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கங்கனா பதிவிட்ட இரு டுவிட்களை குறிப்பிட்டு உள்ளது.


Share this News:

Leave a Reply