வடமாநிலங்களின் தவிற்க முடியாத தலைவராக வளர்கிறார் உவைசி – பிரபல ஊடகவியலாளர் கருத்து!

திருவனந்தபுரம் (13 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி தோல்விக்கு அசாதுத்தீன் உவைசியே காரணம் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று பிரபல மலையாள எழுத்தாளரும், ஊடகவியலாளருமான என்.எஸ்.மாதவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

வடமாநிலங்களில் முஸ்லிம்களின் தவிற்கமுடியாத தலைவராக உவைசி வளர்ந்து வருவதையே பீகாரில் அவரின் வாக்கு சதவீதம் காட்டுகிறது. தேஜஸ்வி தலைமையிலான கூட்டணி வழக்கமான வாக்குகளை பெற்றதாக தெரியவில்லை. அதனை பெற்றிருந்தாலே தேஜஸ்வி கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற இடங்களில் உவைசியின் வாக்குகள்தான் பிரித்தது என்பதற்கான எந்த புள்ளிவிவரங்களும் இல்லை. அதேவேளை உவையின் வாக்கு வங்கி அங்கு அதிகரித்திருப்பதையும் தற்போது மறுக்க முடியாது.

கடந்த இரண்டு முறை உவைசி தனியாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். ஆனால் இம்முறை சாமர்த்தியமாக செயல்பட்டு, குடியுரிமை சட்ட விவகாரத்தை கையிலெடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த அளவுக்கு வாக்குகளை பெற்றுள்ளார்.

பீகாரில் முஸ்லிம்களின் பாதுகாப்பின்மையை உணர்ந்து ஒவைசி செயல்பட்டதும் இந்த முறை நிலைமை மாறியது. உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்களாதேஷில் இருந்து ‘ஊடுருவியுள்ளவர்களை வெளியேற்றுவது குறித்துப் பேசியதும்,இதற்கு அங்கு பதிலளித்தவரும் உவைசி மட்டுமே.

இவ்வறு மாதவன் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: