பாஜகவுக்கு தைரியம் இல்லை; உமர் அப்துல்லா!

Share this News:

ஸ்ரீநகர் (14 டிச 2022): : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்த ஒன்றிய அரசிடம் இனி கெஞ்சப்போவதில்லை என முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

பஹல்காமில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, தேர்தலை தாமதப்படுத்துவது குறித்து தங்கள் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், காஷ்மீரில் தேர்தலை நடத்த பாஜக பயப்படுவதாகவும் கூறினார்.

மத்திய அரசு எப்போது தேர்தல் நடத்தினாலும் தேசிய மாநாடு தயாராக உள்ளது. ஆனால் இதற்காக ஒருபோதும் ஒன்றிய அரசிடம் கெஞ்ச மாட்டோம். பாஜகவினர் பயப்படுகிறார்கள், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லை. தேர்தல் வரட்டும் மக்கள் எங்கே நிற்கிறார்கள் என்று பார்ப்போம் என்று உமர் அப்துல்லா கூறினார்.


Share this News:

Leave a Reply