மக்கள் மனதிலிருந்து பெயரை மாற்ற முடியாது – யோகிக்கு உவைசி பதிலடி!

ஐதராபாத் (30 நவ 2020): ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என மாற்றப்படும் என்று உ..பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

ஐதராபாத் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, “ஐதராபாத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், ஐதராபாத்தின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்படும்.”என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் AIMIM தலைவர் உவைசி கூறுகையில், “ஐதராபாத்தின் பெயரை மாற்றினாலும் மக்கள் மனதிலிருந்து ஐதராபாத் என்ற பெயரை மாற்ற முடியாது” என்றார்.

ஹாட் நியூஸ்: