அர்ணாப் கோஸ்வாமியின் ஜாமீன் மேலும் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (27 நவ 2020): ரிபப்ளிக் டிவி தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமியின் ஜாமீனை மேலும் நான்கு வாரங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் மற்றும் அவரது தாயார் 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் அர்ணாப் மீதான மறு விசாரணையில் அர்ணாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்தனர். அவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் அர்ணாபின் ஜாமீனை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: