கொரோனாவுக்கு இலவச பரிசோதனை குறித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் திடீர் மாற்றம்!

Share this News:

புதுடெல்லி (14 ஏப் 2020): கொரோனாவுக்கு பரிசோதனை செய்ய முன்வரும் எல்லோருக்கும் இலவச பரிசோதனை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து சோதனை செய்வதற்கு தற்போது வரை 157 அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. அதே போல 67 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு கொரோனா சோதனைக்கான கட்டணமாக 4,500 ரூபாயை மத்திய அரசு நியமித்தது. தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் ஆய்வகங்களிலும் அனைவருக்கும் கொரோனா சோதனை இலவசமாக செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 8 ம் தேதி உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


Share this News:

Leave a Reply