ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு!

புதுடெல்லி (21 ஜன 2020): ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த 37 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன.

இந்நிலையில் இந்த போராட்டத்தை சீர்குலைக்கவும், கொச்சைப்படுத்தவும் பாஜக வழக்கமான பாணியை கையில் எடுத்தது. அதன் ஐடி செல் அவர்கள் வேலையை காட்டினர். அதாவது போராட்டக் காரர்கள் ரூ 500 வாங்கிக் கொண்டு போராடுவதாக அவதூறு பரப்பினர்.

இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...