புதுடெல்லி (27 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டம் 40 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது.
பொது மக்கள் போராட்டக் களத்தில் தொடர்ந்து போராடி வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் காலை பல லட்சக் கணக்கானோர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
தேசியக் கொடிக்கு உரிய மரியாதையுடன் பல லட்சம் மக்கள் நின்று மரியாதை செய்தது அனைவரையும் நெகிழச் செய்தது.
அரசு ஷஹீன் பாக் போராட்டத்தை ஒடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டபோதும் பொது மக்கள் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று உறுதியுடன் நின்று போராடி வருகின்றனர்.
போராட்டக் களத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி…!
டெல்லி ஷஹீன் பாக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் குடியரசு தின கொடியேற்றம்
Posted by Inneram on Sunday, January 26, 2020