தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

Share this News:

புதுடெல்லி (30 செப் 2022): சிஏஏ வழக்கில் 2019 முதல் சிறையில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் தொடர்ந்து அவர் காவலில் இருக்க நேர்ந்துள்ளது.

கடந்த. 2019 ஆம் ஆண்டு ஜாமியா நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பேசிய உரைக்காக ஷர்ஜீல் இமாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஷர்ஜீல் இமாம் மீது பல வழக்குகள் பதியப்பட்டு தற்போது சிறையில் உள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பேசிய வழக்கில் டெல்லியின் சாகேத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் இமாம் மீது வேறு வழக்குகள் இருப்பதால் காவலில் இருப்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Share this News:

Leave a Reply