இந்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மதிக்காத ட்வி ட்டர்!

புதுடெல்லி (31 மே 2021): இந்திய அரசின் புதிய விதிகளை ஏற்பதில் ட்வி ட்டர் காலதாமதம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் கடந்த 26ஆம் தேதி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு. குறிப்பாக , குறைதீர்க்கும் அலுவலர், கட்டுப்பாட்டு அலுவலர், தலைமை குறைதீர்க்கும் அலுவலர் ஆகியோரை நியமிக்க வேண்டும்; அவர்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்; அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் தொடர்பு எண்களையும் தங்களின் சமூக ஊடக பக்கங்களிலேயே வெளியிட வேண்டும்; புகார்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல லட்சம் பயனாளர்களை வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டன. அதன்படி, தங்களின் சமூக ஊடக பக்கத்தில் பின்பற்றத் தொடங்கியுள்ளன. ஆனால், இன்றுவரை (31.5.2021) ட்விட்டர் மட்டும் புதிய விதிகளைப் பின்பற்றத் துவங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாட் நியூஸ்: