அதானி குழுமம் மீது விசாரணை நடத்த ஒன்றிய அரசு முடிவு!

Share this News:

புதுடெல்லி (04 பிப் 2023): அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய நிறுவன விவகார அமைச்சகம் இதுகுறித்து விசாரனை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதானியின் நிதித் தகவல்கள் மற்றும் பதிவுகளை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு இதுவே முதல் விசாரணை.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானாலும், அதானி குழுமத்தை ஒன்றிய அரசு விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானிக்கு ஒன்றிய அரசு உதவி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை எழுப்பின. இந்நிலையில் விசாரணை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதானி குழுமத்திற்கு எதிராக செபியும் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. விசாரணை அறிவிக்கப்படும் நிலையில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply