சிறுமி வன்புணர்வு – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்!

நொய்டா (29 ஏப் 2022): உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வியாழன் அன்று காவல்துறை அதிகாரிகளுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்-பஜ்ரங் தள அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதில் ஒரு காவல்துறை அதிகாரி காயம் அடைந்தார்.

17 வயது சிறுமியை 13 வயது சிறுவன் வன்புணர்வு செய்த வழக்கு தொடர்பாக வலதுசாரி அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சிறுமியும் சிறுவனும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. வன்புணர்வு செய்த சிறுவன் இந்து என்பதாக கூறப்படுகிறது. அந்த சிறுவனை கைது செய்ததை எதிர்த்து இந்துத்துவாவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த மோதல் தொடர்பாக வலதுசாரி அமைப்பினர் சிலர் கைது செய்யப்படுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353 (பொது ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி) கீழ் காவல்துறையினர் இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

ஹாட் நியூஸ்: