அபுதாபி மீது ட்ரோன் தாக்குதல் – 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி!

அபுதாபி (17 ஜன 2022): அபுதாபி விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் எரிபொருள் டேங்கர் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

பலியானவர்களில் இரண்டு இந்தியரும், ஒரு பாகிஸ்தானியரும் அடங்குவர். மேலும் ஆறு பேர் மிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தியதை ஏமனின் ஈரான் ஆதரவு ஹுத்திகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: