உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல சவூதியில் இலவச விசா தொடக்கம்!

Share this News:

ஜித்தா (31 ஜன 2023): உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல நான்கு நாள் இலவச போக்குவரத்து விசாக்கள் சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ளன.

சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான ஃப்ளைனாசின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு நான்கு நாள் பயண விசா இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு வருபவர்கள் உம்ரா செய்யவும், மதீனாவுக்குச் செல்லவும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லவும் அனுமதிக்கப்படுவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.

சவுதி விமான நிலையம் வழியாக பிற நாடுகளுக்கு செல்லும் போக்குவரத்து பயணிகளும் இந்த சேவையை பயன்படுத்தலாம். சவுதியா மற்றும் ஃப்ளைனாஸ் விமானங்களுக்கான ஆன்லைன் டிக்கெட் பெறும்போதே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், சில நிமிடங்களில் விசா மின்னஞ்சலில் அனுப்பப்படும். நாட்டிலுள்ள எந்த விமான நிலையத்திலிருந்தும் வருவதற்கும் புறப்படுவதற்கும் அனுமதி உண்டு.

நாட்டை உலகளாவிய சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கிலும், சுற்றுலாத் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தப் புதிய சேவை தொடங்கப்பட்டது. எந்தெந்த நாடுகளில் இது கிடைக்கும் என்று கூறவில்லை. இதனால், அனைத்து நாடுகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.


Share this News:

Leave a Reply