ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம், நபிகள் நாயகத்தின் மசூதியில் தொழுவதற்கு, எந்த அனுமதியும் தேவையில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ரமலானில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ரமலான் 1 முதல் 19 வரையிலான நாட்களில், அதிகாலை 2.30 முதல் சுப்ஹு தொழுகை வரையிலும், முற்பகல் 11.30 முதல் இஷா தொழுகை வரையிலும் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் சுப்ஹு தொழுகை முடிந்தது முதல் காலை 11 மணி வரையும், இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அதேவேளை, ரமழான் மாதம் 20ஆம் நாள் முதல் இறுதி வரை நுழைவு நேரத்தில் மாற்றம் செய்யப்படும் என மஸ்ஜித் நபவி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நஸ்க் மற்றும் தவகல்னா செயலி மூலம் அனுமதி பெற்றவர்கள் நேர அடிப்படையில் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். என மஸ்ஜித் நபவி அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்: