சவூதியில் வாட் (வரி) மற்றும் வெளிநாட்டவர்களுக்கான லெவியில் மாற்றமில்லை!

Share this News:

ரியாத் (09 டிச 2022): சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரிகளில் எந்த மாற்றமும் இல்லை.

“கோவிட் காலத்தில், உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்படாது. தற்போதைக்கு தற்போதைய முறை தொடரும்” என்று சவுதி அரேபிய நிதியமைச்சர் முகமது அல் ஜடான் அறிவித்துள்ளார்.

“சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கான லெவியில், காப்பீடு உட்பட 12,000 ரியால்களுக்கு மேல் செலவிடுவார்.

பட்ஜெட்டில் இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாகவும் உள்ளது. வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இந்த வரி விதிப்பு அறிமுகப் படுத்தப்பட்டது.

இதனுடன், சவூதி அரேபியாவில் மதிப்பு கூட்டு வரி (வாட்) தற்போது மாறாது. கோவிட் சூழ்நிலை காரணமாக வரி 5% இல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதார நிலை மேம்படும் போது இதை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்!”

இவ்வாறு சவுதி நிதி அமைச்சர் முன்பு கூறியிருந்தார். தற்போது அதையே தொடர முடிவு செய்யப் பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply