இஸ்ரேலிய படை பாலஸ்தீனர்களுக்கு இடையே மோதல் – ஒரு பாலஸ்தீனர் சுட்டுக்கொலை!

ரஹ்மல்லா (06 அக் 2022): பாலஸ்தீன் வடக்கு மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகருக்கு வடக்கே உள்ள டெய்ர் அல்-ஹதாப் கிராமத்தில் இஸ்ரேலிய வீரர்களுடன் நடந்த மோதலின் போது 21 வயதான நாசர் சாகல் என்ற பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இஸ்ரேலிய தாக்குதலில் பொதுமக்கள் இருவர் மற்றும் பாலஸ்தீனிய அரசாங்கத்தின் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். என்று தெரிவிக்கப்படுள்ளது.

நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், டெய்ர் அல்-ஹதாப் கிராமத்தில், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் கிராமத்தில் வெடித்தன. பாலஸ்தீனியர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை வீசிய வீரர்கள் மீது பாலஸ்தீனியர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்குக் கரையில் பாலஸ்தீன போராளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய பின்னர் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.

உத்தியோகபூர்வ பாலஸ்தீனிய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி தொடக்கத்தில் இருந்து மேற்குக் கரையில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மார்ச் முதல், இஸ்ரேலிய நகரங்களில் பாலஸ்தீனியர்கள் நடத்திய தாக்குதல்களில் 18 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....