கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு கத்தார் செய்த உதவி!

430

தோஹா (05 பிப் 2020): சீனாவிற்கு மருந்துவ உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக கத்தாருக்கான சீன தூதுவர் Zhou Jian அவர்கள் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வூஹான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கத்தாரிலிருந்து சீனாவிற்கு மருத்துவ உதவி பொருட்கள் அனுப்பப் பட்டுள்ளன. அதில் முகமூடிகள், கையுறைகள் உட்பட மருந்துப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளதாக Zhou Jian தெரிவித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதி!

மேலும், கத்தார் நாடும் சீனாவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர்களின் ஆரோயக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கத்தார் அக்கரையுடன் செயல்படுவாதகவும் அவர் தெரிவித்தார்.