சவூதியில் பனிப்பொழிவு – வெப்ப நிலையில் மாற்றம்!

Share this News:

ரியாத் (27 டிச 2022): சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது.

சவூதி அரேபியாவின் வடக்கு எல்லையில் உள்ள ஜபல் அல்-லூஸ், அலகான் அல்-தார், அரார், துரைஃப், அல்-ஹசம், அல்-ஜலாமித் உள்ளிட்ட தபூக் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அல் ஜூஃப் மாகாணத்தில் உள்ள குராயத் பகுதியிலும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு நாட்டிலேயே மிகக் குறைந்த வெப்பநிலை வடக்கு எல்லைப் பகுதியில் உள்ள துரைஃப் மற்றும் அல் குரையாத்தில் பதிவாகியுள்ளது. இங்கு வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

சவூதி அரேபியாவின் குளிர் பிரதேசமான துரைஃபில் மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. துரைஃப் பகுதியின் பரந்த சமவெளிகளும் மலைகளும் ‘வெள்ளை கடல்’ போல் பரந்து விரிந்து கிடப்பது ஒரு அற்புதமான காட்சியாக உள்ளது.

மேலும் சவுதி அரேபியாவின் பல பனிமூட்டமான பகுதிகள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.


Share this News:

Leave a Reply