துபாய் இளவரசி எதிர்ப்பு – அபுதாபி நிகழ்ச்சியிலிருந்து இந்துத்வா கொள்கையாளர் ஜீ நியூஸ் சுதீர் சவுத்ரி நீக்கம்!

Share this News:

துபாய் (22 நவ 2021): துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிமின் எதிர்ப்பைத் தொடர்ந்து அபுதாபி நிகழ்விலிருந்து தீவிர இந்துத்வா சிந்தனையாளரும், ஜீ.நியூஸ் தலைமை செய்தியாளருமான சுதிர் சவுத்ரி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வலதுசாரி இந்து அறிவிப்பாளரான சுதிர் சௌத்ரி, இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லீம்களை இலக்காகக் கொண்டு பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பல பிரைம் டைம் நிகழ்ச்சிகள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்தியுள்ளன. –

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபியில் பட்டய கணக்காளர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்கு சுதிர் சவுத்ரி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கு துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் அவரது தொடர் ட்விட்டர் பதிவுகள் சுதிர் சவுத்ரிக்கு எதிராக இருந்தது. அமைதியான நாட்டிற்கு எதற்கு இஸ்லாமிய எதிர்ப்பாளரை அழைத்திருக்கிறார்கள் என்பதாக அவரது ட்விட்டர் பதிவு இருந்தது.

மேலும் நிகழ்ச்சி நடத்துனர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து சுதிர் சவுத்ரி அபுதாபி நிகழ்ச்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் அபுதாபியில் உள்ள ஃபேர்மவுண்ட் பாப் அல் பஹரில் நடைபெறும் வருடாந்திர சர்வதேச கருத்தரங்கில் தலைமை விருந்தினராக சுதிர் சவுத்ரியை ICAI அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply