ஐக்கிய அரபு அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி!

துபாய் (31 ஜன 2022):ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹூத்தி படையினர் மீண்டும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது இரு வாரங்களுக்கு முன் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரமும் அமீரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் முற்பட்டனர். எனினும் இதை அமீரக படையினர் இடையிலேயே தடுத்து நிறுத்தி அழித்தனர்.

இந்நிலையில் 3ஆவது முறையாக மீண்டும் ஏவுகணை தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. இம்முறையும் ஏவுகணை இடைமறித்து தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மக்கள் வசிக்காத பகுதியில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததாகவும் இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...