ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி!

போட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.

தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆகாஷ் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட் கைப்பற்றினர். எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன் (17) சுமாரான துவக்கம் தந்தார். பிஷ்னாய் பந்தில் மகமதுல் ஹசன் ஜாய் (8), தவ்ஹித் ஹிரிடோய் (0), ஷஹாதத் ஹொசைன் (1) அவுட்டாக்கினர். வங்கதேச அணி 27 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இமான் (47) நம்பிக்கை தந்தார்.

வங்கதேச அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்ற பின், 30 பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என, ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது. வங்கதேச அணி 42.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் முதன்முறையாக உலக கோப்பை வென்றது.

ஹாட் நியூஸ்: