கர்நாடகம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி (06 மார்ச் 2020): கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில் 10பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதில் தமிழக பக்தர்களின் காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. அதில் பெங்களூரை சேர்ந்த 3 பேரும் பலியாகினர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹாட் நியூஸ்:

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...