கொரோனாவுக்கு தமிழகத்தில் மூன்றாவது பலி!

174

தேனி (04 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மூன்றாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா பாதித்தவர்கள் இந்தியாவில் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 411 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் பலியாகியிருந்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  லாக்டவுன் மற்றும் ரம்ஜான் காலங்களில் ஜித்தா முத்தமிழ் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் தொடர் சேவை!

இந்நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. “தேனியைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதிப்பு நபரின் மனைவி (53), தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று மூச்சுத்திணறல் அதிகமாகி பிற்பகல் 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.