சென்னை (20 பிப் 2020): இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜமாத்துல் உலமா சபை தலைமையில் தமிழகமெங்கும் பிப்ரவரி 19 அன்று பேரணி நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் பிப்ரவரி 19 ல் நடைபெற்ற பேரணி – வீடியோ தொகுப்பு!
Posted by Inneram on Wednesday, February 19, 2020
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இரண்டரை லட்சம் பேர் பங்கேற்ற பேரணி உலகின் கவனத்தை ஈர்த்தது. அதேபோல தமிழகமெங்கும் மாவட்ட கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டமும் அதே தினத்தில் நடைபெற்றது.