விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு!

Share this News:

சென்னை (20 செப் 2020): சென்னையில் விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விவசாய அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுகணக்கான பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சி நேரத்தில் வானில் பறக்கவிட கேஸ் பலூன் எனப்படும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது. பலூன்களை காற்றில் பறக்கவிட்டது. அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அந்த பட்டாசுகளில் இருந்த நெருப்பு துளி ஹீலியம் நிறைந்திருந்த பலூன் மீது பட்டு பலத்த சத்தத்துடன் அந்த பலூன்கள் வெடித்தது. அப்போது அந்த பலூன்களில் நிரப்பட்டிருந்த கேஸினால் திடீரென பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த பாஜகவினர், சிறுவர்கள் மீது படர்ந்தது. இந்த விபத்தில் 20 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி வாங்காமல் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அனுமதி பெறாமல் ஆட்களை கூட்டியது, தீப்பற்றக்கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினரான முத்துராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply