பண மதிப்பிழப்பால் பாதிக்கப் பட்ட பாட்டிக்கு உதவிய திமுக எம்.எல்.ஏ!

233

வேலூர் (14 ஜன 2020): பண மதிப்பிழப்பால் பழைய 500 ரூபாய் நோட்டுகளை இன்றும் வைத்துக் கொண்டு திண்டாடிய பாட்டிக்கு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் உதவியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திடீரென ரூ 500 மற்றும் 1000 செல்லாது என அறிவித்தார். இதனால் நாடே திக்கு முக்காடியது. பலர் செய்வதறியாது தவித்தனர். வங்கிகளில் காத்து கிடந்த மக்கள் பல சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதைப் படிச்சீங்களா?:  ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை!

இந்நிலையில் வேலூர் மாவட்டம் லவன்பேட்டை சூளைமேட்டை சேர்ந்த புவனேஸ்வரி என்ற மூதாட்டிக்கு இந்த பணமதிப்பிழப்பு குறித்து தெரியாமல் இருந்துள்ளது. அவர் 12000 மதிப்பிலான ரூ 500, 1000 வைத்திருந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய மறுத்துவிட்ட நிலையில், அணைக்கட்டு எம்.எல்.ஏ-வும் தி.மு.க மாவட்ட செயலாளருமான நந்தகுமார் மூதாட்டியை நேரில் வரவழைத்து ரூ.12,000 கொடுத்து உதவிசெய்துள்ளார். மூதாட்டிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைத்துள்ளார்.