ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்கும் ஓட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ்!

ஈரோடு (01 ஏப் 2020): கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவற்றில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றோர் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் ஆதரவற்றோருக்கு இரண்டு வேளை இலவசமாக உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இடையான்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ். பொறியியல் பட்டதாரியான இவர், அப்பு ஹோட்டல் என்ற பெயரில் ஹோட்டல் வைத்துள்ளார்.

இவர் தன்னார்வலர்கள் மூலம் ஈரோட்டில் உள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பணியை கடந்த 25 ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகிறார்.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...