தமிழ் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது திமுக – எச்.ராஜா!

காரைக்குடி (27 ஜூன் 2021): ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகத்த்திற்கு தலைகுனிவு என்று பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எச் .ராஜா, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில், ‘ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகமே தலைநிமிர்ந்தது,’ என்றார். இதுபோன்ற தலைகுனிவு வேறில்லை. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளை தான் ஜெய்ஹிந்த் என்று முன்மொழிந்தார்.

அதன் பிறகுதான், நேதாஜி ஜெய்ஹிந்த் என்பதை பிரபலப்படுத்தினார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூட்டம் முடிந்த பிறகு 3 முறை ஜெய்ஹிந்த் என்பார். ஆனால், திமுக கூட்டணி எம்எல்ஏ இப்படி கூறியதை காங்கிரஸார் எப்படி சகித்துக் கொள்கிறார்கள். தேசியத்தை கேள்வி கேட்கும் பேச்சுகள் தற்போது அதிகரித்துள்ளன.

பிரிவினைவாதத்தை வளர்க்கும் சூழ்நிலையை உருவாக்க திமுக அரசு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. பூஜை முறைகள் குறித்து நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும், இஷ்டம் போல் பேசுவது, அதன் சொத்துகளைப் பாதுகாக்காமல் இருப்பது, இந்து பள்ளிகள் மீது குறி வைத்து நடவடிக்கை எடுப்பது திமுகவின் திட்டமிட்ட செயல்” என்றார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...