தமிழக அரசு மீது மீது எச்.ராஜா தாக்கு!

சென்னை (13 ஜன 2020): தமிழகத்தில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டதாகவும் அரசு அதனை சரிவர கண்டு கொள்ளவில்லை என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கொலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பேசி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மிகக்கடுமையாக இருக்கிறது. ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளி முஸ்லீமாக இருந்தால் எதிர்க்கட்சிகள் வாயில் பிளாஸ்டிக் போட்டு ஒட்டிப்பாங்க என்றும் கூறியுள்ளார்.

மேலும் காரைக்குடியில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: