சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை புறக்கணிப்போம் – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (15 ஜன 2019): அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய என்ற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சார்பில் கடந்த ஜனவரி 11 அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தினசரிகளில் வாடிக்கையாளரை அறிவோம் (Know Your Customer KYC) குறித்த ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.

இந்த விளம்பரத்தில் ஜனவரி 31க்குள் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களை பற்றி தெரிவிப்பதற்காக சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் வரிசையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பதிவு கடிதத்தையும் சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவுவேடு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் 2010ல் அது நடைபெற்ற போது எந்தவொரு கடிதமும் வழங்கப்படவில்லை. இச்சூழலில் விஷமத்தனமான இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்து அந்த வங்கியை அனைவரும் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...