ஆபாச வீடியோவில் பாஜக தலைவர் கே.டி.ராகவன் – அதிர்ச்சியில் தமிழக பாஜக!

சென்னை (24 ஆக 2021): பாஜக தலைவர் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஒரு யுடூபர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கே.டி ராகவன் பூஜை அறையில் இருந்தவாறு பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசியவாறு காம சேஷ்டையில் ஈடுபவதாக அமைந்துள்ளது. இந்த விடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

இதற்கிடையே அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கூறியுள்ள ராகவன், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இதுகுறித்து பேசியதாகவும், பிறகு ராஜினாமா செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்து ட்விட் வெளியிட்டுள்ளார்.

பாஜக தலைவரின் ஆபாச வீடியோ வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: