கொரோனா நெகட்டிவ் எனினும் எஸ்பிபிக்கு இந்நிலையா?

310

சென்னை (08 செப் 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா சோதனை நெகட்டிவ் என்றபோதிலும் நுரையீரல் முன்னேற்றம அடையவில்லை.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைப் படிச்சீங்களா?:  சாலையில் உலா வரும் மாடுகள் - விபத்தில் சிக்கும் வாகனங்கள்

இந்தநிலையில் அவரது மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தந்தைக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்பதாகவும் எனினும் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் செயற்கை சுவாச சிகிச்சையும், எக்மோ கருவியும் பொருத்தப்பட்டிருந்தாலும் அவர் நுரையீரல் முன்னேற்றம் அடைய தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் எஸ்.பி.பிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.