மேலக்காவேரி மசூதி வக்பு நிர்வாகிகள் தேர்வு!

455

கும்பகோணம், மேலக்காவேரி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வக்ஃபு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மேலக்காவேரி பள்ளிவாசலின் சமுதாயக்கூடத்தில் 11.10.2020 ஞாயிறன்று தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது, வாக்கு எண்ணிக்கை முடிவில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் அதிகமாக வாக்குகள் பெற்ற 5 வேட்பாளர்கள் அப்துல் ரஷீத், ஹாஜி முகமது ஜீலானி, ஜாபர் சாதிக் அலி, அபு பக்கர் மற்றும் ஜாபர் பாட்சா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் பதவி காலம் 11.10.2020 முதல் மூன்றாண்டுகள் ஆகும். நிர்வாக அலுவலக பதவிகள் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதைப் படிச்சீங்களா?:  ஆயுத பூஜை விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை!

மேலக்காவேரி பள்ளிவாசலுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் 5 நபர்களும் வக்ஃப் வாரிய செயல்முறை சட்ட திட்டத்தின்படி வரும் வெள்ளிக்கிழமை வக்ஃப் அலுவலர்கள் முன்னிலையில் கூடி தங்களுக்குள் நிர்வாக அலுவலக பதவிகளுக்கு தேர்வு செய்து தங்கள் பொறுப்புகளை ஏற்பர் என்று வக்ஃப் வாரிய தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.