ஒரு சூழலிலும் இந்திய சட்டத்தை மீறவில்லை – தப்லீக் ஜமாத் பிரமுகர் விளக்கம்!

581

கோவை (02 ஏப் 2020): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாத் பிரமுகர் அங்கு நடந்த சூழல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலியையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா பரவ காரணமாக டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் கூடிய தப்லீக் ஜமாத்தான் என்று அரசும், இந்திய ஊடகங்கள் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக தப்லீக் ஜமாத் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் சென்று தற்போது கோவை கொரோனா கேம்பில் உள்ள தப்லீக் ஜமாத் பிரமுகர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “அரசும் ஊடகங்களும் திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்புகின்றன. இந்த ஜமாத் கூட்டம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே திட்டமிடப் பட்டு அனைவரும் டெல்லி சென்று பிரதமரின் திடீர் ஊரடங்கு உத்தரவால் சட்டத்திற்குட்பட்டு உடனடியாக நிறுத்தப்பட்டு பெரும்பாலானவர்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்பிவிட்டோம். ஆனால் ஏன் இப்படி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிகழ்ச்சி தமிழக ஆலோசனை கூட்டமே தவிர ஊடங்கள் கூறுவதுபோல் உலக கூட்டம் அல்ல. ஆனால் டெல்லி மர்கஸில் எல்லா தினங்களிலும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தப்லீக் ஜமாத்தினர் தங்கியிருப்பார்கள். இதையெல்லாம் ஊடகங்களும், அரசும் தவறாகவே சித்தரித்து வெளியிடுகின்றன. டெல்லி கூட்டம் நடைபெறுவது அரசிற்கு தெரியும். அங்கு எல்லா நிகழ்ச்சிகளுமே அரசின் சட்டத்திற்குட்பட்டே நடைபெற்று வருகின்றன. அதேபோலத்தான் அரசின் உத்தரவை அடுத்து உடனடியாக கூட்டம் நிறுத்தப் பட்டது.” என்றார்.

இதைப் படிச்சீங்களா?:  யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? யுவனின் மனைவி அதிரடி பதில்!

மேலும் “நாங்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ரெயில், விமானம் என டிக்கெட் புக் செய்து, எங்களது ஆவணங்களை சமர்ப்பித்தே டெல்லி பயணப்பட்டு திரும்பியுள்ளோம். எந்த சூழலிலும் இந்திய சட்டத்தை மீறவில்லை. ஒருவேளை நாங்கள் தவறு செய்திருந்தால். நாங்கள் எப்படி பயணித்திருக்க முடியும்?. ரெயில், விமானம் என அனைத்தும் செயல்பாட்டில் இருந்தபோதே நாங்கள் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்தோம். எனினும் கூட்டத்தின் இடையில் அரசின் திடீர் உத்தரவு வந்ததால். கூட்டத்தை உடனே முடித்துக் கொண்டு பலர் ஊர் திரும்பி விட்டனர். எனினும் திடீரென ரெயில் நிறுத்தப் பட்டுவிட்டதால் முன் பதிவு செய்திருந்தும் ரெயிலில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் மட்டும் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இதெல்லாம் டெல்லி அரசுக்கு தெரியும். மேலும் நாங்கள் டெல்லி போலீஸ் அனுமதியுடனும், பாதுகாப்புடனும் டெல்லி விமான நிலையம் வந்து கோவை வந்தடைந்தோம். இதெல்லாம் சரியானபடியே நடந்துள்ளது. ஆனால் ஏன் எங்கள் அமைப்பு மீது அபாண்டமாக பழி போடுகின்றனர்?”. கோவை கொரோனா கேம்பில் உள்ள எவருக்கும் கொரோனா இருப்பதாக ரிப்போர்ட் வரவைல்லை. எனினும் அரசிற்கு ஒத்துழைப்பு அளித்து அங்கு தங்கியுள்ளோம்” என்றார்.

இது ஒருபுறமிருக்க, கொரோனா உலகெமெங்கும் பரவி வந்த நிலையில், இந்திய அரசு அப்போதே சரியான அளவில் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல். கோவை ஈஷா யோகா மைய்யத்தில் பல வெளிநாட்டினர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்திருந்தனர். அது மட்டுமல்லாமல், பல ஆன்மீக, அரசியல் கூட்டங்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப் பட்டுள்ளன. அதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அதுகுறித்தெல்லாம் ஆலோசிக்காத அரசு, தப்லீக் ஜமாத் மீது மட்டும் பழி போடுவது. கொரோனா தடுப்பில் அரசின் மெத்தனத்தையும், தோல்வியையுமே காட்டுகிறது. என்று பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.