தமிழகத்தில் பள்ளியில் ஹிஜாப் தடையா? – பெற்றோர் காவல்துறையில் புகார்!

சென்னை (23 ஏப் 2022): சென்னை தாம்பரம் சங்கர வித்தியலாய பள்ளியில் பெற்றோர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப் பட்டதை அடுத்து பெற்றோர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தை சேர்ந்த ஆசீக் மீரான் என்பவர் கிழக்கு தாம்பரத்தில் இயங்கிவரும் சங்கர வித்யாலயா பள்ளியில் தனது 4 வயது குழந்தைக்கு LKG வகுப்பு சேர்க்கைக்காக மனைவி, குழந்தையுடன் சென்றிருந்தனர்.

பள்ளியில் வளாகத்தில் விண்ணப்பம் பெறுவதற்காக அமர்ந்திருந்தபோது, பள்ளியின் அட்மின் மேலாளர் சுந்தரராமன் என்பவர், குழந்தையின் தந்தை அழைத்து, தங்கள் மனைவியை வெளியே சென்று ஹிஜாபை கழற்றி வைத்துவிட்டு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி முதல்வர் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்தபோது, பள்ளியின் உள்ளே ஹிஜாப் அணிந்து யாரும் வர அனுமதியில்லை என்று முதல்வரும் கூறியதாகவும் கூறப்படுகிறது.

எனவே சம்பந்தபட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசீக் மீரான் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், தமுமுகவினர் என பலரும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் பெற்று கொண்டகாவல்துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்: