ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி!

Share this News:

சென்னை (30 மார்ச் 2021): வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டி பாமகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற அனைத்து சாதியினருக்கும் சேர்த்து 20% இடஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தென்மாவட்டங்களில் சீர்மரபினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதேபோல் தென் மாவட்டங்களில் உள்ள பிற சாதியினரிடமும் அதிருப்தி ஏற்படுள்ளதாகக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள அமைச்சர்கள் வன்னியர் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தற்காலிகமானது என்று கூறிவருகிறார்கள். சாதிவாரிய கணக்கெடுப்புக்கு பிறகு புதிய சட்டம்நிறைவேற்றப்படும்என்று கூறிவருகிறார்கள்.

அமைச்சர் உதயகுமார் பேசி சர்ச்சையான நிலையில், தற்பாது ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓபிஎஸ் இதே கருத்தையே பேட்டியில் சொல்லி உள்ளார். தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது தான்.சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பிறகு வன்னியர் இட ஒதுக்கீடு இறுதியாகும்.சாதிவாரி கணக்கெடுப்பு குழு தரும் அறிக்கை அடிப்படையில் வன்னியர் இட ஒதுக்கீடு கூடுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு பாமகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் அதிருப்தி அடைந்தார்.

இதற்கிடையே ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply