சாதி வெறியின் ருத்ரதாண்டவம் – தலித் உடலை எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு!

தென்காசி (15 அக் 2020):  மரணித்த தலித் உடலை  எடுத்துச்செல்ல ஒருகுறிப்பிட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோயில் பகுதியில் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆதிக்க சாதியினர் என இரு பிரிவினரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒருவர் நேற்று இறந்துள்ளார்.

இவரது சடலத்தை சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால்  இப் பகுதியின் வழியாகவே செல்ல வேண்டும். இந்நிலையில், இந்தப் பகுதிக்குள் நுழையக் கூடாது என்று சாதி இந்துக்கள் பிரச்சினை செய்துள்ளனர்.

ஏறக்குறைய ஊர் சண்டையாக மாறும் அளவுக்குப் பிரச்சினை பெரிதானதையடுத்து, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உடன்பாடு எட்டப்பட்டு ஊர் வழியாக சடலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...