பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு!

சென்னை (17 டிச 2022): பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்வுகள் வரும் டிசம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான்...

மோடிக்கு எதிரான பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் பேசுவது என்ன?

புதுடெல்லி (25 ஜன 2023): பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிபிசி ஒளிபரப்பியது. 2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச்...

அழைத்த கவர்னர் – மறுத்த முதல்வர்!

புதுடெல்லி (27 ஜன 2023): தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர்...