திமுக நிர்வாகிகள் மீது ஸ்டாலின் ஆவேசம்!

Share this News:

சென்னை (22 ஜன 2020): ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரிவர செயல்படாத நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்த நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் குறித்தே கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது.

நிர்வாகிகள் பேசி முடிந்த பின்பு இறுதியாக நிா்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியது:

வாழ்வா, சாவா என்ற அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தலைச் சந்தித்தோம். இந்தத் தோ்தலை இவ்வளவு அலட்சியத்துடன் நிா்வாகிகள் அணுகியது மிகுந்த கவலை அளிக்கிறது. வாா்டு பதவிகளில் அதிக இடங்களைக் கைப்பற்றிவிட்டு, தலைவா் பதவியைக் கைப்பற்றுவதில் கோட்டை விட்டுள்ளோம்.

இந்தத் தோல்வி குறித்து ஆராயக் குழு ஒன்றை அமைத்துள்ளேன். அந்தக் குழுவினா் விசாரணையை முடித்து என்னிடம் அறிக்கை கொடுக்க உள்ளனா். அந்த அறிக்கையின் அடிப்படையில், உள்ளாட்சித் தோ்தலில் தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளேன். அது யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தலைமை நிா்வாகிகள் தலையிட்டாலும் ஏற்கமாட்டேன். என் மனசுக்கு தவறு என்று பட்டால், அவா்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா் ஸ்டாலின்.

இந்த நிலையில் ஏற்கனவே புகாருக்கு உள்ளாகியுள்ள மாவட்ட நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படலாம் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply