தேசியக்கொடியும், திராவிடக் கொடியும் – கவிஞர் வைரமுத்து திடீர் கருத்து!

223

சென்னை (01 ஆக 2020): ‘தேசியக் கொடியை மதிப்போம், அதேபோல திராவிடக் கொடியையும் தூக்கிப் பிடிப்போம்’ என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இந்தியக் கல்விக்கொள்கையை மத்திய அரசு மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன, சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!

அதில், அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிசாமி அரசும் அதைத் தாங்கி பிடிக்க தயங்க தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.