கொரொனா தடுப்பூசி குறித்து ஆக்ஸ்போர்டு புதிய அறிவிப்பு!

Share this News:

லண்டன் (27 நவ 2020): அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் தடுப்பூசி புதிய வழியில் சோதிக்கப்படும் என்று ஆக்ஸ்போர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு நிறுவனமமும் ஒன்று. இந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டபோது சோதனைகளில் ஒன்று எதிர் முடிவைக் காட்டிய பின்னர் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசியின் சோதனை நிறுத்தப்பட்டது. பரிசோதனையாளர்களில் ஒருவர் எதிர் முடிவைக் காட்டியபோது சோதனை நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து இரண்டு வாரங்கள் கழித்து சோதனை மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த வாரம், தடுப்பூசியின் இறுதி கட்டம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை 70 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது. மூன்றாம் கட்ட சோதனையில் தடுப்பூசிக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சோதனை முடிவுகள் குறித்து பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது. இந்த பரிசோதனையில் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபடக்கூடும் என்று அஸ்ட்ராசெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆக்ஸ்போரு நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply